Thursday 15 March 2018

நாக தோஷம் - பகுதி - 1


நாக தோஷம் என்றால் – புராணம்



முன் ஜென்மத்தில் பாம்புகளை கொன்று இருந்தாலோ இல்லை அதை துன்புறுத்தி இருந்தாலோ இந்த நிலை ஏற்படும் என ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.. { அது சரி பாம்பை கொன்றால் நாக தோஷம். தினமும் கோழியை கொல்கிறோம் , ஆட்டை கொல்கிறோம்..அதற்க்கு  ஏற்ப கோழி தோஷம் , ஆடு தோஷம் ஏற்பாடதா என மக்களுக்கு கண்டிப்பாக கேட்க தோன்றும்.ஆனால் ஆதி முதல் மக்களை பார்த்து பாம்பும் , பாம்பை பார்த்து மக்களும் பயந்த காரணத்தினாலோ இல்லை .... வரையறுக்கப்பட்ட தோஷம் பாம்பின் நெளிவு சுளிவுகளுடன் ஒற்று போவதாலும் இருக்கலாம்சிறிய ஜீவனாக இருந்து சில நொடிகளில் மரணத்தை ஏற்படுத்தும் பாம்புகளின் குணம் போலவும் இந்த தோஷத்தின் வலிமை இருக்கலாம். அதனால் நாக தோஷம் என பெயர் வைத்து இருக்கலாம். ஜோதிடத்தில் ராகு , கேது என முக்கிய நிழல் கிரகங்களின் ஆதிக்கம் இருப்பதாலும் இந்த தோஷம் கடுமையான தோஷம் பண்டைய நூல்களான பூர்வபராச்சரிய்ம் , ஹோரா , சராவளி , சோதிட மர்மம் , ஜாதக பீடிகை என அனைத்தும் இந்த தோஷத்தின் வலிமையே எடுத்து உறைகின்றன.  .
ராகுவின் வரலாறும் கேதுவின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே வித தன்மையை உடையனஸ்ரீராகு ஸம்ஹதா தேவியின் மகனாவார்தேவரும், அசுரரும் பாற்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர்.பாற்கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. 
கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார்அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்ததுஅதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர்இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார்அவரைக் கண்ட அசுரர்கள் மயங்கி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருமாறு வேண்டினர். மோகினி தேவர்களுக்கு அமிர்ததத்தைப் பங்கிட்டுக் கொடுத்து கொண்டு வந்தாள்அப்போது ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் தேவர்களின் உருவம் கொண்டு அமர்ந்து அமிர்தத்தை உண்ண ஆரம்பித்தனர். அவர்கள் சாப்பிட்ட விதத்தைப் பார்த்த சூரியன், சந்திரன் ஆகியோர் அவர்கள் அசுரர்கள் என்பதை உணர்ந்த மோகினி கரண்டியினால் ராகுவின் தலையை வெட்டினாள்.உடனே ராகுவின் தலை ஆகாயம் சென்றதுதலையற்ற முண்டம் தரையில் வீழ்ந்தது. 

இதனால் அசுரர்கள் கொதித் தெழுந்தனர்தேவர்அசுரர் போராட்டம் மிகவும் பயங்கரமாக எழுந்ததுஅதில் ராகுவின் தலை சிவசிரஸில் இருக்கும் சந்திரனைக் கவ்வியதுஅப்போது சந்திரனின் தலையில் உள்ள அமிர்தத்தை ராகுவின் தலை பருகியதால் ராகுவிற்குப் பல தலைகள் உண்டாயிற்று. ராகுவின் பல தலைகளைக் கண்டு தேவர்கள் பயந்தனர்.சிவபெருமான் ராகுவின் தலைகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார்ராகுவின் தலைகள் அமைதி அடைந்தனதேவர்களின் பயம் நீங்கியதுஈசனருளால் ராகு கிரகமாய் இருக்கும் தன்மையைப் பெற்றான். ராகுவை உபாசிக்க ராகுவினால் உண்டாகும் பீடைகள் போகும்ராகுவைப்போலவே கேதுவும் அமிர்தம் பட்ட காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்றான்சிவனது அருளால் கிரகமாகும் பேற்றைப் பெற்றான்கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம்இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. 
கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாதுஇவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும்.இவர் உதித்தது, ஆடி மாதம் சுக்கில பட்சம் ஆகும்ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும்இந்த விசேஷ நாட்களில் இவரை வழிபடுவது சிறப்புடையதாகும். வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர்ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்று அழைப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

நாக தோஷம் என்றால் – அறிவியல்


ராகு கேது இவ்விரு கிரகத்தின் மின்காந்த அலைகள் மனித உடம்பில் சுவாசம் வழியாக கலந்து சரீரத்தில் விந்து சக்தியினை நீர்த்து போக செய்கிறது இந்த ராகு கேதுவின் மின்சக்தி நமது பூமியில் உள்ள பாம்பு இனத்தில் அதிகம் உள்ளதுபாம்பினை அடித்து கொள்ளும்பொழுது அதன் உடம்பிலிருந்து இந்த ராகு கேதுவின் மின்சக்தி உடனே வெளிப்பட்டு அதை அடித்தவரின் சுவாசம் வழியாக உள்ளே சென்று சரீரத்தில் உள்ள விந்து சக்தியினை நீர்த்து போகசெய்கின்றதுஇவ்வாறு பாம்பினை அடித்து கொன்றால் நாகதோஷம் ஏற்பட்டு விந்து சக்தி சரீரத்தில் நீர்த்து போய் குழந்தை தாமதம் அல்லது குழந்தை இல்லாத நிலையும் ஏற்படும்
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும்,லக்னம்,சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து,
எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அந்த வீட்டுக்குரியவனின் ஆற்றலை அதிகப்படுத்துவார்கள் அல்லது குறைப்பார்கள்.

தொடரும்...


No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...