Thursday 15 March 2018

நாக தோஷம் - பகுதி 2


தோஷம் இருக்கும் இடங்கள்


2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். 

1.
 லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம்.
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம். 

2.
 லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளது நாகதோஷமே. 
இருதய சம்பந்தமான நோய்;, சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம்,
குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது. 

3
 லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேத இருப்பதால் புத்திரபாக்யம்
தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த 
நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும். 

4
 லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப் படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு,
மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம்.
ஆனால் ஜhதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும், 

5
 லக்னம்; அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால்,
விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால்
8
வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். 
6.லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷமே,
இதனாலும் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும்.
12
ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்;லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.  லக்னத்தில் அதாவது முதலாவது இடத்தில் ராகு, கேது இவற்றில் ஏதாவது ஒன்றிருந்தாலும்,அந்த ஜாதகத்தின் படி, அவர் செல்வந்தர் ஆவார். 

இருப்பினும் வியாதியால் தொல்லைள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்கண்டிப்பாக புத்திர பாக்கியம் இருக்கும்2-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், நடுத்தர வயதில் யோகங்கள் கிட்டும்இருதார யோகம் உண்டுபொதுவாக எப்போதும் ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

3-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதாவது ஒன்று இருந்தால், அந்த ஜாதகர் தைரியசாலியாகவும்,மகாலட்சுமியின் கடாட்சம் பெற்றவராகவும் இருப்பர்4-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், அந்த ஜாதகத் குறுகிய எண்ணம் உடையவராகவும், நன்னெறியில் நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்தாலும், பிறர்பால் தரிசனம் உண்ணவராகவும் இருப்பர்.

5-ஆம் இடத்தில் ராகு இருந்தால் பித்ரு சாபம், புத்திர தோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறதுஇதனால் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டு, எந்தக் காரியத்தைத் தொட்டாலும், அதில் தடை ஏற்படும்6-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், நிலையான யோகம் பெற்றவராக ஜாதகர் இருப்பர்.

பெண்களை வசீகரித்து, மகிழ்விக்கும் படி நடந்து கொள்வர்7-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், நீரினால் பாதிப்பு உண்டாகும்கலைகளில் சிறந்து விளங்குவர்.இருதார யோகம் உண்டு8-ஆம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால், பிற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையைப் பொறுத்தே பலன்கள் இருக்கும்.

9-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதேனும் ஒன்று இருந்தால், யோகங்களைக் கெடுக்கும்.பெற்றோரோடு ஒத்துப் போகாதுதெய்வ வழிபாடு குன்றி, சண்டை, சச்சரவுகள் உறவினர்களோடு தொடர்ந்து கொண்டே இருக்கும்10-ஆம் இடத்தில் ராகு, கேது ஏதாவது ஒன்றிருந்தால், பணத்திற்கு பஞ்சமே இருக்காது. செய்தொழில் சிறப்பாக நடக்கும்.

11-ஆம் இடத்தில் ராகு இருந்தால், நிறைந்த யோகம் உண்டுபணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும்தப்பான வழிகளில் கூட, சரியாக பணம் வந்து சேரும்12-ஆம் இடத்தில் கேது இருந்தால் அடுத்த பிறவி கிடையாது என்று சொல்வார்கள்ராகு, கேது இங்கு மறைந்தால் கஷ்டங்களை கொடுப்பார் என்றும் சொல்லிவிட முடியாது.

திருமண பொருத்தம்
·          ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம்ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து,மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது. 
·          அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்சத்திரம் தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது. 
·          அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்ம நட்சத்திரம் வரும். ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. 
·          ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.
·          ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.
பரிகாரம்
1.     வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவத்தை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும்அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.
2.     செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும். 
3.        நாக சதுர்த்திக்கு அடுத்த நாள்  வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.
ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால்வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.
4.         எந்த விதமான சர்ப்பதோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். 



பரிகார பஞ்ச ஸ்தலங்கள்


1.        திருகாளகத்தி
சிமந்திரா (ஆந்திரா) மாநிலத்தில் உள்ளது..
2.        குடந்தை கிழ் கோட்டம்
கும்பகோணம் அருகில் உள்ளது
3.        திருபாம்புரம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது
4.        கிழ் பெரும்பள்ளம்
மாயவரம் அருகில் உள்ளது
5.        திரு நாகைக் காரோணம் .
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்தியில் உள்ளது.

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...