Friday 9 March 2018

அஷ்டாவக்ரர் பற்றிய கதை..

அஷ்டவக்கிரன்


அஷ்டவக்கரன்  என்பவர் இந்து சமயப் புராணங்களில் குறிப்பிடப்படும் துறவியாவார். இவரை அஷ்டாவக்கிரர் என்றும் அழைக்கின்றனர். அஷ்ட + வக்கிரன் - அஷ்டம் என்றால் எட்டு என்றும் வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருளாகும். இவர் பிறக்கும் போதே உடலில் எட்டு இடங்களில் கோணலுடன் பிறந்துள்ளரார். இவருடைய உடலில் இரு பாதங்கள், இரு கால் மூட்டுகள், இரு கை மூட்டுகள், மார்பு மற்றும் தலை ஆகியவற்றில் கோணல்கள் காணப்பட்டன. அஷ்டாவக்கிர ரிசி, அஷ்டாவக்கிர முனிவர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பார்வைக்கு அகோரமாக இருந்தாலும், அறிவு நிறைந்தவர் என்றும், உடல்தோற்றத்தினை வைத்து மனிதருடைய அறிவினை அளவிடுதல் கூடாது என்பதாக இவருடைய வாழ்க்கையை வைத்து இந்து மதத்தில் போதிக்கப்படுகிறது.
அஷ்டவக்கிரர் ஜனக மகாராஜருக்கும் , யாக்ஞவல்க்கியருக்கும் ஆகியோருக்கு குருவாக இருந்துள்ளார். அஷ்டவக்கிரரின் தாய்மாமன் சுவேதகேது ஆவார்.
உத்தாலக ஆருணி என்ற குருவின் சீடர் கஜோளகர். குறைவாகப் படித்திருந்தாலும் உண்மையானவர். அதனால் உத்தாலகர் தன் மகளை சீடரான கஜோளகருக்குத் திருமணம் செய்வித்தார். இத்தம்பதியரின் குழந்தை கருவிலிருக்கும் போது, கஜோளகர் தப்பும் தவறுமாக மந்திரம் சொல்வதைப் பொறுக்கமுடியாமல் கருவிலேயே, எட்டு கோணல் அடைந்தது. உடல் எட்டுக் கோணலுடன் பிறந்ததால், அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன்எனப்பெயராயிற்று. அஷ்டவக்கிரனின் தந்தையான கஜோளகர்ஜனகரின் ஆஸ்தான புலவரான வந்தியிடம் தோற்று கடலில் மூழ்கடிக்கப்பட்டார். பின் அஷ்டாவக்கிரன் வளர்ந்து பண்டிதனாகி, வந்தியை ஜனகர் சபையில் வாதப்போரில் வென்றார்.


ஜனகன்
 
தனது அரசவையின் தலைமை வித்வான் வேதாந்த நூல் ஒன்றில் சொல்லப்பட்ட தகவல் குறித்து உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த நூலில் பிரம ஞானம் பெறுவது குதிரை ஏறும் ஒரு மனிதன் குதிரையின் சேணத்தில், ஒரு காலை வைத்து மற்றொரு காலை எடுத்து வைக்கும் நேரத்திற்குள் பிரம்ம ஞானம் பெறலாம் என்றிருந்தது. ஜனகன் உரையாடலை நிறுத்தி "இந்த வாக்கியத்தின் உண்மையை இறுதி செய்யும் பொருட்டு ஒரு குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?" எனக் கேட்டான். "ஞான அனுபவத்தை நிரூபிப்பது என்னால் இயலாது" என்று பின்வாங்கினார். இந்த வாக்கியத்தில் உள்ளதை நிரூபிப்பது என்னால் இயலவில்லை என்பதால், பொய்யென்று சொல்ல முடியாது" என்று கூறிய வித்வான்களை சிறையில் அடைத்தார் அரசன்.
அரசனி சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, உடல் எட்டு கோணலாக இருந்த அஷ்டவக்கிரன் எனும் இளைய முனிவரை, மக்கள் ஜனகனின் அரச சபைக்கு கூட்டிச்சென்றனர். அஷ்டாவக்ரரை நோக்கி "முனிவரே குதிரை கொண்டு வரச் சொல்லவா?" எனக் கேட்டார். அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே அவசரப்பட வேண்டாம் தாங்கள் கேட்ட சந்தேகத்தை போக்க தனி இடத்திற்கு செல்ல வேண்டும்" அதற்கு ஏற்பாடு செய்க என்றார்.
அரசன் கட்டளைப்படி அஷ்டாவகரர் பல்லக்கிலும் அரசன் படை பரிவாரங்களுடனும் அஷ்டாவக்ரரை தொடர்ந்து காட்டிற்கு சென்றனர். காடு நெறுங்கியதும் அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே உங்கள் படை பரிவாரங்கள் திரும்பிப் போகட்டும் நாம் இருவர் மட்டும் தனித்து இருப்பது" நல்லது என்று கூறினார். அரசனும் தனது படை பரிவாரங்களை திருப்பி அனுப்பியவுடன், குதிரை மீது இருந்த அரசன் முனிவரே நான் கீழே இறங்க உதவுங்கள் என வேண்டினான், அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே தங்கள் கூறும் நூலில் ஞானம் குருவினால் சீடனுக்கு அருளப்படுவது என உள்ளதே அந்த நிலையில் நாம் இருப்பது உண்மைதானா?" எனக் கேட்டார். அரசனும் அஷ்டாவகரரை வணங்கி "நான் தங்களுக்கு சீடனானேன் அருள் புரிக" என்றான், அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா உண்மையான சீடன் தன்னையும், தன்னுடையதையும் குருவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்" எனறார். அரசனும் "அவ்வாறே அர்பணம் செய்கிறேன்" என்றான். அஷ்டாவகரர் அரசனிடம் "அவ்வாறே" எனக்கூறி மறைந்து போனார். அரசனும் அந்த இடத்திலேயே சிலையைப் போல ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். பொழுது சாய்ந்து நீண்ட நேரமாகியும் மன்னன் திரும்பாததால் அமைச்சர் மற்றும் ஏனையோரும் மன்னனைத் தேடி காட்டிற்கு வந்தனர். மன்னன் சிலையென நிற்பதையும் அஷ்டாவகரர் அங்கு இல்லாத்தும் கண்டு அதிர்சியுற்றனர். மன்னன் இவர்கள் அனைவரும் அங்கு இருப்பதையே உணராமல் மயக்க நிலையிலேயே இருந்தான். அமைச்சரும் மற்றவர்களும் அரசனை ஒரு பல்லக்கில் படுக்க வைத்து அரண்மனைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் காலை வரை அரசனிடம் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு அஷ்டாவகரரை கண்டுபிடித்து வர படைகளை அனுப்பி வைத்தனர். மாலை நேரத்தில் சில படைவீர்ர்கள் அஷ்டாவகரரை கொண்டுவந்தனர், முதன் மந்திரிக்கு மிகுந்த கோபம் இருந்தாலும் அரசனின் நலனைக் கருதி அரசனை பழைய நிலைக்கு கொண்டுவரக் கேட்டுக்கொண்டார். அரசனின் இந்த நிலைக்கு அஷ்டாவகரரே காரணமென குற்றம் சுமத்தினர், அதற்கு அஷ்டாவகரர் அரசனிடம் இதை கேட்டுவிடலாம் என்று கூறி "ஜனகா "என அழைத்தார், அரசனும் "சுவாமி" என வணங்கினான். அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா நான் உன்னை மிகவும் பரிதாபகரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்" என்றார். அரசன் கோபமுற்று "யார் அப்படிச் சொன்னது" என கேட்டான். மந்திரிகளும் மற்றவரும் பயந்து மன்னரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முனிவரை வேண்டினர். அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய், உலக நடைமுறைக்கு மாறாக இருப்பதேன் எல்லோரையும் போல் இருப்பது தானே?" என்றார். "முனிவரே நான் உமது சீடன் உமது ஆணைப்படியே நடப்பேன்" என்றான், "உனக்கு ஞானத்தை போதிக்கவே உன்னை இவ்வாறு சோதித்தேன், உடை களைந்து உணவு உண்டுவா பின்னர் நாம் பேசலாம்" என்று அஷ்டாவகரர் அரசனிடம் கூறினார். அதன் பிறகு அஷ்டாவகரர் அரசனிடம் உபதேசித்த பிரம்ம ஞானமும் ஜனகர், அஷ்டாவகரரிடம் கேட்ட கேள்விகளுமே அஷ்டாவக்ர கீதை ஆகும்.

எழுதிய நூல் ..
அஷ்டவக்கிர கீதை அஷ்டவக்கிர சம்ஹிதை
நன்றி..
wikipedia.. 

No comments:

Post a Comment

27.ரேவதி

நட்சத்திர   வேறு பெயர்கள் நாவிதன் , கடை மீன் , தோணி , மரக்கலம் , சூலம் , நாவாய் , கிரக நிகண்டு   நட்சத்திர   தன்...